அனைவரையும் வரவேற்கிறோம்! தமிழில் தொழில்நுட்ப ஏடுகள் பெரும் அளவில் வெளியாவது இல்லை. இதற்கு மிகப்பெரிய காரணம் ஆங்கில தொழில்நுட்ப வார்தைகளுக்க்கு இணையான தமிழ் சொற்கள் பலருக்கு தெரியாததுதான். இந்த பின்னடைவை போக்கும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பல இணையதளங்கள் தமிழ் வார்த்தைகளை நாம் தெரிந்து'கொள்ள உதவினாலும் அனைத்து கணியச் சாதனங்களிலும் இயங்குவதில்லை. இந்த இணையதளம் அனைத்து நவீன கணியச் சாதனங்களிலும் இயங்கும் தன்மை கொண்டது. இந்த இணையதளத்தை உருவாக்கியவர் ஆட்ரி ஜோவின். இவர் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அறிவு பகிர்தலை திறந்த மூலமாக்க போராடும் இவர், பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.
இந்த இணையதளம் தமிழ் தொழில்நுட்ப மேதைகளான
முனைவர் சிவ அய்யாதுரைக்கும்,
முனைவர் மயில்சாமி அண்ணாதுரைக்கும் சிறப்பு சமர்ப்பணம். மேலும் இந்த இணையதளம் ஆட்ரி ஜோவினுடைய பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.